தேசிய செய்திகள்

காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை + "||" + Pranab Mukherjee, Arvind Kejriwal not invited for Rahul Gandhi's Iftar party

காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை

காங்கிரஸ்  நடத்தும்  இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை
காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹமீத் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. #PranabMukherjee #ArvindKejriwal
புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 13 ம் தேதி புதுடெல்லியில்   இஃப்தார் விருந்து வழங்க உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர் பட்டியலில் பல முக்கிய பிரபலங்கள் விடுபட்டு இருப்பதாக ஜி நியூஸ்( Zee News) தகவல் வெளியிட்டு உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்தை ஏர்பாடு செய்து உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சி தாஜ் பேலஸ் ஒட்டலில் நடைபெற்ற உள்ளது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என  செய்தி வெளியிட்டு உள்ளது.

பிரணாப் முகர்ஜி, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. நான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் -மூத்த தலைவர் திக்விஜய் சிங்
நான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியால் கட்சிக்குள் குழப்பம்.
2. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது - திருமாவளவன் பேட்டி
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது என திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்தார்.
3. காங்கிரஸ் மீது மாயாவதி தாக்கு; கர்நாடகா அமைச்சரவையிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. விலகல்
காங்கிரஸ் கட்சியை மாயாவதி விமர்சனம் செய்த நிலையில், கர்நாடகா அமைச்சரவையிலிருந்து அவருடைய கட்சி எம்.எல்.ஏ. விலகியுள்ளார்.
4. இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை
இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். அப்போது தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
5. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை