தேசிய செய்திகள்

சன்னி லியோனுக்கு ஆதரவாக பேசிய பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் + "||" + Why can't we look at Sunny Leone the way we look at Sridevi or Madhuri Dixit: Hardik Patel

சன்னி லியோனுக்கு ஆதரவாக பேசிய பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல்

சன்னி லியோனுக்கு ஆதரவாக பேசிய பட்டேல்  இன தலைவர் ஹர்திக் பட்டேல்
ஒரு ஆபாச நட்சத்திரத்தின் முந்தைய படத்தின் அடிப்படையில் பார்வையை வைத்துக் கொண்டால் நாட்டை மாற்ற முடியாது என சன்னி லியோனுக்கு ஆதர்வாக பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் பேசினார்.
இந்தூர்

மத்தியப்பிரதேசத்தில்  'யாத்திரை ஒன்றில் கலந்து கொள்ள வந்த பட்டேல் இன தலைவர் ஹரதிக் பட்டேல்  சன்னி லியோனுக்கு ஆதரவாகப் பேசினார்.

அவர் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:-

சன்னி லியோனை திரையில் ஒரு நடிகையாக ஏன் பார்க்க முடியாது. அவரது பழைய  படங்களை  வைத்து அவரை ஏன் பார்க்க வேண்டும். நடிகர்கள் நர்கிஸ், ஸ்ரீதேவி, அல்லது மாதுரி தீட்சித் ஆகியோரை நாம் பார்ப்பது போல் பார்த்து கொண்டால் என்ன?

, சன்னி லியோன் தனது பழைய உருவத்தின்( ஆபாச நட்சத்திரமாக) அடிப்படையில் நாம் தற்போதும் பார்த்தோமானால்  இந்த நாட்டை எப்போதும் மாற்ற முடியாது, " என கூறினார்.