உலக செய்திகள்

லண்டனில் அரசியல் அடைக்கலம் கோரி நிரவ் மோடி தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் + "||" + Nirav Modi Seeks Political Asylum In UK

லண்டனில் அரசியல் அடைக்கலம் கோரி நிரவ் மோடி தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்

லண்டனில் அரசியல் அடைக்கலம் கோரி நிரவ் மோடி தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்
லண்டனில் அரசியல் அடைக்கலம் கோரி நிரவ் மோடி தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NiravModi
லண்டன்,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ.11,700 கோடி அளவுக்கு மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துக்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை முடக்கியுள்ளன. 
இந்நிலையில், தலைமறைவான நிரவ் மோடி லண்டனுக்கு சென்றுள்ளதாகவும் அங்கே அரசியல் அடைக்கலம் கோரி தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் 3-வது மோசடி தொழிலதிபராகத் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். பிரிட்டன் அரசு தரப்பு இதுகுறித்து எவ்விதமான தகவல்களையும் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில், நீரவ் மோடியை ஏந்தொரு பத்திரிக்கையாலும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஏற்கனவே விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் இந்திய அரசு போராடி வரும் நிலையில் தற்போது நீரவ் மோடியும் லண்டனில் தஞ்சம் புகுந்தது இந்திய அரசிற்கு கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது.