உலக செய்திகள்

உயர்ந்த வரிவிதிப்பு: இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை + "||" + US President Donald Trump threatens to stop trading with India over high tariffs

உயர்ந்த வரிவிதிப்பு: இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

உயர்ந்த வரிவிதிப்பு: இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
உயர்ந்த வரிவிதிப்பால் இந்தியா மற்றும் பல நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார். #DonaldTrump
கியூபெக்

கியூபெக்கில் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற டொனால்டு டிரம்ப்  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நான் சொல்கிறேன், நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம், அங்கு சில கட்டணங்கள் 100 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. நூறு சதவீதம் நாங்கள் எதுவும் வசூலிக்கவில்லை.

நாம் அதை செய்ய முடியாது. அதனால் நாம் பல நாடுகளுக்கு கேட்கிறோம். நாங்கள் எல்லா நாடுகளையும் கேட்கிறோம் .

அதை நிறுத்த சொல்லி. அல்லது நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும்.  நாம் அதை செய்ய வேண்டும் என்றால் அது ஒரு மிகவும் இலாபகரமானதாகும்.

கட்டண வரிகள் குறையும், ஏனென்றால் மக்கள் தொடர்ந்து அதை செய்ய முடியாது. எல்லோரும் கொள்ளையடிக்கிறார்கள் நாங்கள் பிச்சைக்காரனைப் போல இருக்கிறோம் அது முடிவடைகிறது என கூறினார்