தேசிய செய்திகள்

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை; மத்திய மந்திரி பியூஷ் கோயல் + "||" + No plans to privatise railways: Piyush Goyal

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை; மத்திய மந்திரி பியூஷ் கோயல்

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை; மத்திய மந்திரி பியூஷ் கோயல்
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் ரெயில்வே அமைச்சகத்தின் கடந்த 4 ஆண்டு சாதனைகள் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.  இதில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, ரெயில்வே துறையை ஒரு பொழுதும் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுப்படுத்தி கொள்கிறேன் என கூறினார்.

அவர் ரெயில்வே அமைச்சகத்தின் சாதனைகளை பற்றி கூறும்பொழுது, கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் நாளொன்றுக்கு சராசரியாக 4.1 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வந்தன.  இது கடந்த 2014-2018 வரையிலான ஆண்டுகளில் நாளொன்றுக்கு சராசரியாக 6.53 கி.மீட்டர் என்ற அளவில் உயர்ந்து உள்ளது.  இது 59 சதவீத உயர்வாகும்.

அரசின் இலக்கான புல்லட் ரெயில் திட்ட பணிகளை செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டுள்ளன.  இந்த நாட்டில் வளர்ச்சி திட்டம் மற்றும் புதிய விசயங்கள் தொடர்புடையவற்றில் எப்பொழுதும் விவகாரங்கள் இருக்கும்.  ஆனால் அவற்றில் நாம் தீர்வு கண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையன்
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையன் கூறினார்.