தேசிய செய்திகள்

நீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை சிபிஐ தகவல் + "||" + CBI does not have confirmation on the whereabouts of Nirav Modi yet

நீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை சிபிஐ தகவல்

நீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை சிபிஐ தகவல்
நீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது. #CBI #NiravModi
புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இந்த மோசடி புகார் வெளிச்சத்துக்கு வந்ததும், இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். 

இந்தநிலையில், நீரவ் மோடி லண்டனுக்கு சென்றுள்ளதாகவும் அங்கே அரசியல் அடைக்கலம் கோரி தஞ்சம் புகுந்துள்ளதாக பிரபல நாளிதழான பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்து இங்கிலாந்து உள்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், தனிநபர் பற்றிய தகவலை வழங்குவது இல்லை என கூறி பிரிட்டன் அலுவலகம் மறுத்துவிட்டதாகவும் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறியிருப்பதாவது:

நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷியும் தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. நீரவ் மோடியும் கோச்சி, இருக்கும் இடம் உறுதிச்செய்யப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடுவோம். அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் : மராட்டிய மந்திரி தகவல்
வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களாக்கள் இடிக்கப்படும் என்று மராட்டிய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.