உலக செய்திகள்

டிரம்ப் நாளை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்புவார்: வெள்ளை மாளிகை + "||" + Trump to leave Singapore Tuesday: White House

டிரம்ப் நாளை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்புவார்: வெள்ளை மாளிகை

டிரம்ப் நாளை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்புவார்: வெள்ளை மாளிகை
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பை முடித்து விட்டு அன்று இரவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா திரும்புவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. #TrumpLeaveSingapore
சிங்கப்பூர்,

தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.  பெரும் வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.  

இரு நாட்டுத்தலைவர்களும் நேற்று சிங்கப்பூர் வந்தடைந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு இருவருக்குமிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தையை முடித்து விட்டு 11 மணி நேரம் முன்னதாக, அதாவது செவ்வாய் அன்று இரவு 8 மணிக்கே அதிபர் டிரம்ப் அமெரிக்கா திரும்புவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.