தேசிய செய்திகள்

நாட்டில் கடனை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழு எடுத்துக்காட்டாக உள்ளது; மத்திய மந்திரி பேச்சு + "||" + Women SHGs are real agents of development: Tomar

நாட்டில் கடனை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழு எடுத்துக்காட்டாக உள்ளது; மத்திய மந்திரி பேச்சு

நாட்டில் கடனை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழு எடுத்துக்காட்டாக உள்ளது; மத்திய மந்திரி பேச்சு
நாட்டில் கடனை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழு எடுத்துக்காட்டாக உள்ளது என மத்திய கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நாடு முழுவதுமுள்ள சிறந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கான தேசிய விருதுகளை மத்திய கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி நரேந்திரா சிங் தோமர் இன்று வழங்கினார்.

அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, இதுபோன்ற சமூக அமைப்புகளின் சிறந்த செயல்களுக்காக வழங்கப்படும் வெளிப்படையான அங்கீகாரம் இந்த விருதுகள்.  ஏழை உறுப்பினர்களுக்கு பெருமை அளிக்கும் உணர்வை இது ஏற்படுத்தும் என கூறினார்.

கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினரை பாராட்டிய தோமர், அவர்கள் வளர்ச்சியின் உண்மையான முகவர்கள்.

இந்த குழுக்களை நடத்தி வரும் நமது சகோதரிகள் தங்களது வீடுகளை நிர்வாகம் செய்வதுடன் தங்களது கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறினார்.

நாட்டில் கடன்கனை திருப்பி செலுத்துவதில் ஓர் எடுத்துக்காட்டாக கிராமப்புற மகளிர் சுய உதவி குழுவினர் இருக்கின்றனர்.  மொத்த தொகையில் 2 சதவீதத்தினரே கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தல்: மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியா?
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியிட போவது குறித்து, அவரது கணவர் கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை
எந்த கட்சியையும் உடைக் கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
3. ரெயில்வே துறைக்கு வேலை செய்யவே வந்தோம்; வீடு கட்ட அல்ல: மத்திய மந்திரிக்கு ரெயில்வே ஊழியர் கடிதம்
ரெயில்வே துறைக்கே வேலை செய்யவே வந்தோம் என்றும் வீடு கட்ட அல்ல என்றும் மத்திய மந்திரி கோயலிடம் ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.