தேசிய செய்திகள்

வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி + "||" + Congress President Rahul Gandhi visited All India Institute of Medical Sciences (AIIMS) to meet former PM Atal Bihari Vajpayee,

வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். #RahulGandhi
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல் ஒவ்வாமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். பின்னர் வழக்கமான சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்தது.

இந்தநிலையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.