தேசிய செய்திகள்

வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi arrives at All India Institute of Medical Sciences (AIIMS) to visit former PM Atal Bihari Vajpayee

வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி

வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். #NarendraModi #Vajpayee
புதுடெல்லி,

1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். பின்னர் வழக்கமான சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்தது. 

அவர் நலமுடன் இருப்பதாகவும், வாஜ்பாயின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ. மூத்த நிர்வாகிகள் சென்றனர்.