தேசிய செய்திகள்

நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம்: பிரதமரின் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு + "||" + Rajnath chairs high-level meeting to ensure PM Modi's safety

நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம்: பிரதமரின் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு

நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம்: பிரதமரின் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு
பிரதமர் நரேந்திரமோடியின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். #Rajnath #PMModi
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பாணியில், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதுபற்றி விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று ஒரு உயர்மட்ட கூட்டத்தை கூட்டினார்.

அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, உளவுப்பிரிவு இயக்குனர் ராஜீவ் ஜெயின் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினர். எல்லா பாதுகாப்பு அமைப்புகளும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.