உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு + "||" + Blast in Afghanistan: the death toll rises to 12

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாயினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Afghanistan
காபூல்,

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தானிலும் கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து அந்த பகுதிகளில் தாக்குதல் நடந்து வருகிறது.


இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் முன் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.  ரம்ஜான் மாதம் என்பதால் அலுவலகத்திற்கு மதியத்திற்கு மேல் விடுமுறை விட்டுள்ளனர். அப்போது, பணியாளர்கள் எல்லோரும் வெளியேறும் நேரம் பார்த்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30-க்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், கடந்த ஒரு வாரமாக மாற்றி மாற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 22 பேர் மரணம் அடைந்தனர். இந்தநிலையில் இன்று, கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் முன் தீவிரவாதிகள் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பின் போது சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாயினர். மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தில் மொத்தம் 30 பேர் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் மாதத்தில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.