உலக செய்திகள்

கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது: டொனால்டு டிரம்ப் + "||" + US President Donald Trump says one-on-one meeting with Kim Jong Un was 'very, very good,' says they have an 'excellent relationship

கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது: டொனால்டு டிரம்ப்

கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது: டொனால்டு டிரம்ப்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
சிங்கப்பூர்,

உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அணு ஆயுத சோதனை நடத்தி தனி ஆவர்த்தனம் நடத்திய வடகொரியா,  திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வடகொரியா, அதன்பிறகு, கடுமையான வார்த்தைப்போரில் ஈடுபட்ட அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டியது. 

இதையடுத்து, சில முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறுவது உறுதியானது. இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், திடீர் திருப்பமாக சந்திப்பை ரத்து செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஆனாலும், வடகொரியா கேட்டுக்கொண்டதையடுத்து, மீண்டும் சந்திப்புக்கு இரு தலைவர்களும் ஆயத்தமாகினர். 

இதையடுத்து, திட்டமிட்ட படி  இன்று (ஜூன் 12) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.  சந்திப்புக்கு பிறகு, பால்கனியில் வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசத்தனர். 

இந்த நிலையில், கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  டிரம்ப் கூறும் போது, “ கிம் ஜாங் அன்னுடனான நேரடி பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது.  நானும், கிம் ஜாங் அன்னும் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண்போம். அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?
உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. அமெரிக்க சிறையில் உள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா, இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா அமெரிக்காவில் சிறைத்தண்டனை முடிவடைவதற்கு முன் இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
3. எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலையா? டொனால்டு டிரம்ப் பதில்
எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலை அறிவிப்பை நெருங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும்: தென்கொரியா விருப்பம்
வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
5. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சீனா பயணம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ஜி ஜிங்பிங் அழைப்பை ஏற்று சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.