தேசிய செய்திகள்

திருப்பதி வந்த அமித்ஷாவை கொல்ல சந்திரபாபு நாயுடு சதி ஆந்திர பாஜக தலைவர் குற்றச்சாட்டு + "||" + Kanna accuses N Chandrababu Naidu of trying to kill Amit Shah

திருப்பதி வந்த அமித்ஷாவை கொல்ல சந்திரபாபு நாயுடு சதி ஆந்திர பாஜக தலைவர் குற்றச்சாட்டு

திருப்பதி வந்த அமித்ஷாவை கொல்ல சந்திரபாபு நாயுடு  சதி ஆந்திர பாஜக தலைவர் குற்றச்சாட்டு
ஆந்திர மாநில பாரதீய ஜனதா தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமித்ஷா தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்திருந்த போது அவரை கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டினார்.
விஜயவாடா

 விஜயவாடாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  மாநில பாரதீய ஜனதா தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா பேசியதாவது:-

தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களும் போலீஸாரும் பாஜக மேலவை உறுப்பினர் சோமு வீரராஜு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். சந்திரபாபு நாயுடு அரசை பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் போதும் அவர்களுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர்.

உங்கள் வயதை வைத்து நீங்கள் மாறியிருப்பீர்கள் என மோடி நினைத்தார். ஆனால் நீங்கள் ( நாயுடு) இன்னும் மாறவில்லை. திருப்பதி கோயிலில் அமித் ஷா சாமி கும்பிட குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சியினரை வைத்து போராட்டம் நடத்தினார்.

அப்போது அமித்ஷாவின் வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதை அனைவரும் பார்த்தனர். போராட்டம் என்ற பெயரில் அவரை படுகொலை செய்ய சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். ஆனால் டிஜிபி மலகொண்டையா தனது அறிக்கையில் ஏதோ குச்சி வந்து காரில் விழுந்ததாக கூறினார் என்று கண்ணா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நாயுடு அரசு எல்லாவகையிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழல் விவகாரத்தை எழுத 300 பக்கங்கள் போதாது. சந்திரபாபு நாயுடு சிறப்பு விமானங்களில் பயணிக்கிறார், 7 நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார். வாஜ்பாயை சந்திரபாபு நாயுடு ஏமாற்றியதை அறிந்தே பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்

இதுகுறித்து தெலுங்கு சேத கட்சியின் ஆந்திர மாநில தலைவர் கிமிடி காலா வெங்கட ராவ் கூறுகையில், கண்ணா கூறிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம். அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா. அமித்ஷா திருப்பதிக்கு வந்தபோது எங்கள் கட்சி சார்பில் எந்த போராட்டத்துக்கு நாங்கள் அழைப்புவிடுக்கவில்லையே என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருமணத்தன்று மாயமான மணமகன் போலீசில் புகார் அளித்த மணப்பெண்
ஆந்திர மாநிலத்தில் மண மேடையில் இருந்து மணமகன் அதிரடியாக வெளியேறிய நிலையில் மணப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே தமிழகத்தைச்சேர்ந்தவர் செம்மர தடுப்பு பிரிவு போலீசாரால் சுட்டுக்கொலை
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே தமிழகத்தைச்சேர்ந்தவர் செம்மர தடுப்பு பிரிவு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. ஆந்திராவில் வெள்ள சேத பகுதிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்
ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
4. கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை தரவுள்ளார். #Karunanidhi
5. திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு சதி - முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு சதிதிட்டம் தீட்டுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். #TirumalaTemple #ChandrababuNaidu​​​​​​​