மாநில செய்திகள்

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு + "||" + 2018-19 academic year For grades 10,11,12 General selection Timetable Release

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. மொழிப்பாடம் ஒரே தாளாக மாற்றப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் .

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும். 8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

29.04.2019 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். தமிழக மாணவர்கள் தேர்வெழுத, இங்கேயே நீட் தேர்வு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை .என கூறினார்