உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனம் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கிய டிரம்ப் + "||" + Trump shows Kim 'The Beast': Bizarre moment US President gave North Korean dictator a peek inside his $2million car

அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனம் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கிய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனம் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கிய டிரம்ப்
தி பீஸ்ட் எனப்படும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனத்தை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட டிரம்ப் அனுமதித்தது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு முடிவடைந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் அறைக்கு வெளியே வந்துள்ளனர்.

அப்போது ஜனாதிபதி டிரம்பை அவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு அழைத்துச் செல்வதற்காக தி பீஸ்ட்  எனப்படும் அரசாங்க சொகுசு வாகனம் தயாராக நின்றுள்ளது. குறித்த வாகனத்தின் அருகாமையில் வந்ததும் கிம் ஜாங் அன் புன்முறுவல் செய்தார்.


அதே வேளையில் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரிகள் காரின் கதவை டிரம்புக்காக திறந்து  விட்டுள்ளனர். உடனே ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன்-ஐ காருக்குள் செல்ல பணிந்துள்ளார். புன்னகை மாறாத முகத்துடன் கிம் ஜாங் அன்னும் 1.6 மில்லியன் டாலர் ( ரூ.10,78,96,000) மதிப்பிலான அந்த காருக்குள் சென்றுள்ளார்.இந்த சொகுசு கார் ஏவுகணை தாக்குதல் மற்றும்  ரசாயன தாக்குதல் உள்ளிட்ட எதுவாக இருப்பினும் ஜனாதிபதியை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு நாடுத் தலைவர்களும் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது என்றே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்புடைய செய்திகள்

1. இளம் வயதில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக டொனால் டிரம்ப் பெண் ஆலோசகர் பரபரப்பு தகவல்
இளம் வயதில் தாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்லயன் கான்வே கூறி உள்ளார்.
2. பாலியல் புகார்: பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு ஜெயில்
அமெரிக்க நகைச்சுவை நடிகர் பில் காஸ்பிக்கு, பாலியல் புகார் தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளது
அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
4. குழந்தை பாலியல் வழக்கில் 50 வருட சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றிய நாய்
அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்த ஒருவருக்கு வழக்கொன்றில் விதிக்கப்பட இருந்த 50 வருட சிறைத்தண்டனை அவர் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
5. பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு
பெயின் கில்லருக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்திவாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.