தேசிய செய்திகள்

பிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தானே சுட்டு தற்கொலை + "||" + Controversial godman Bhayyuji Maharaj shoots himself dead in Indore

பிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தானே சுட்டு தற்கொலை

பிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தானே சுட்டு தற்கொலை
சர்ச்சைக்குரிய பிரபல ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். #BhayyujiMaharaj
இந்தூர்

சர்ச்சைக்குரியசாமியார் மற்றும் ஆன்மீக தலைவர் பய்யூஜி மகாராஜ்   இன்று  பிற்பகல்  துப்பாக்கியால் தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடையாக அவர் இந்தூரில் உள்ள  பம்பாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால், அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பல அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக ஆலோசனை வழங்கிய மகாராஜ் கடந்த காலங்களில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அவர் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரை ஒரு  அமைச்சராக நியமிப்பதாக கூறினார், ஆனால் அதனை அவர் நிராகரித்து விட்டார். பய்யூஜி மகாராஜ்  உண்மையான பெயர் உதய் சிங் தேஷ்முக், அவர் 1.57 க்கு தற்கொலை செய்து உள்ளார்.  அதற்கு முன் அவர் டுவிட்டர் பதிவிட்டு உள்ளார்.