உலக செய்திகள்

டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் கையெழுத்திட்ட வரலாற்று ஆவணம்: நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் + "||" + Donald Trump, Kim Jong-un sign historic document: Four landmark decisions

டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் கையெழுத்திட்ட வரலாற்று ஆவணம்: நான்கு முக்கிய ஒப்பந்தங்கள்

டொனால்டு டிரம்ப், கிம் ஜாங்  கையெழுத்திட்ட வரலாற்று ஆவணம்: நான்கு முக்கிய ஒப்பந்தங்கள்
சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர் அதில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இடம் பெற்று உள்ளன. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
சிங்கப்பூர்

உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளின் படி   திட்டமிட்ட படி  இன்று காலை  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், 

 அமெரிக்கா - கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புதிய உறவை ஏற்படுத்தவும், கொரிய தீபகற்பத்தில் நிலையான, அமைதியான ஆட்சியை நிலைநாட்டவும், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே விரிவான, ஆழமான கருத்து பரிமாற்றங்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். 

உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களை வெளியிட்டு உள்ளன.
கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களையும் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

* அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.

* கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

* ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

* அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.