உலக செய்திகள்

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு ஆக்கப்பூர்வ நடவடிக்கை; ரஷ்யா + "||" + Russia says Trump-Kim summit 'positive': news agency

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு ஆக்கப்பூர்வ நடவடிக்கை; ரஷ்யா

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு ஆக்கப்பூர்வ நடவடிக்கை; ரஷ்யா
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே இன்று நடந்த சந்திப்பு ஆக்கப்பூர்வ நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்து உள்ளது.

மாஸ்கோ,

அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்வது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே சிங்கப்பூரின் சென்டோசா தீவில் ஷாங்ரி லா ஓட்டலில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். 41 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க 4 முக்கிய ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பிற்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத ஒழிப்பினை முற்றிலும் செயல்படுத்த இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.  இதற்கு பதிலாக வடகொரிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாட்டு தலைவர்கள் இடையேயான சந்திப்பு ஆக்கப்பூர்வ நடவடிக்கை என ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுபற்றி ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. நோவோஸ்டி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆவணங்களை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை (சந்திப்பில் கையெழுத்திடப்பட்டவை).  அவை வெளியாகி உள்ளன என்றும் நான் நினைக்கவில்லை.  ஆனால் நடந்து முடிந்துள்ள இந்த சந்திப்பு உண்மையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை என லாவ்ரோவ் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: டிரம்ப் மிரட்டல்
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டலாக பேசினார்.
3. உலகைச் சுற்றி...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறி உள்ளார்.
4. லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டுள்ளது: டிரம்ப் பாராட்டு
லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக இந்தியா மீட்டுள்ளது என ஐநா சபையில் டிரம்ப் புகழ்ந்து பேசினார்.
5. இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
வட கொரியாவின் பியாங்யாங் நகரில் இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.