மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 7 சிலைகளை ஒப்படைக்க தயார்: ஆஸ்திரேலியா + "||" + Australia ready to hand over 7 statues abducted from Tamilnadu

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 7 சிலைகளை ஒப்படைக்க தயார்: ஆஸ்திரேலியா

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 7 சிலைகளை ஒப்படைக்க தயார்: ஆஸ்திரேலியா
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்ட 7 சிலைகளை ஒப்படைக்க தயார் என ஆஸ்திரேலியா தூதர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க ஆஸ்திரேலியா தூதர் சூசன் கிரேஸ் உடன் அமைச்சர் மாஃபா.பாண்டிய ராஜன், ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் ஆகியோர் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, தொல்லியல் துறை ஆணையர் நாகராஜன், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு கமிஷனர் ராமலிங்கம் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியக துணை இயக்குனர் கிறிஸ்டின் பெய்லி ஆகியோர் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள 7 தமிழக சிலைகளை ஒப்படைக்க விடுத்த கோரிக்கையை ஏற்ற ஆஸ்திரேலியா தூதர், தேவையான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் சிலைகளை ஒப்படைக்க தயார் என தெரிவித்தார்.