உலக செய்திகள்

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம் + "||" + Kim accepts Trump's invitation to visit US: KCNA.

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்
அமெரிக்கா வருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. #TrumpKimSummit #SingaporeSummit
பியாங்யாங்,


பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா - வடகொரியா  இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் ஜாங் அன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அணு ஆயுதத்தை முற்றிலும் கைவிடுவது என்பதானது, இரு தரப்புக்கும் இடையே, முரண்பாடுகள் குறைவது மற்றும் இருதரப்பு புரிதலைச்சார்ந்தது எனவும் கிம் கூறியதாக வடகொரியா அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2. வடகொரிய அதிபரை விரைவில் மீண்டும் சந்திப்பேன்: டொனால்டு டிரம்ப் தகவல்
வடகொரிய அதிபரை விரைவில் மீண்டும் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3. சுஷ்மா சுவராஜ் மூலம் நண்பர் மோடிக்கு அன்பான செய்தி அனுப்பிய டொனால்டு டிரம்ப்
சுஷ்மா சுவராஜ் மூலம் நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என டொனால்டு டிரம்ப் செய்தி அனுப்பி உள்ளார். #DonaldTrump #SushmaSwaraj #PMModi
4. வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.
5. ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்
ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.