தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை + "||" + No change in petrol, diesel price

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. #PetrolPrice
சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.  இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இருவாரமாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. 14 நாட்களாக(ஜூன் 12) தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுன் 13) எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 



தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 80.56க்கு விற்பனையாகிறது.
2. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது.
5. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.