தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம் + "||" + 17 dead,more than 35 injured after a private bus hit a divider and overturned near Mainpuri

உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்

உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 35 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மெயின்புரி,

உத்தர பிரதேசத்தில் உள்ள மெயின்புரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில், பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், முதற்கட்ட தகவல்களின் படி, வேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியதாகவும், மோதிய வேகத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...