தேசிய செய்திகள்

உடல் திறனைவிட, மாநில வளர்ச்சியையே அதிகம் விரும்புபவன் நான்: கர்நாடக முதல்வர் குமாரசாமி + "||" + To Prime Minister’s Fitness Challenge, HD Kumaraswamy Says “Thanks, But

உடல் திறனைவிட, மாநில வளர்ச்சியையே அதிகம் விரும்புபவன் நான்: கர்நாடக முதல்வர் குமாரசாமி

உடல் திறனைவிட, மாநில வளர்ச்சியையே அதிகம் விரும்புபவன் நான்: கர்நாடக முதல்வர் குமாரசாமி
உடல் திறனைவிட, மாநில வளர்ச்சியையே அதிகம் விரும்புபவன் நான், இதற்கான ஒத்துழைப்பை பிரதமரிடம் எதிர்பார்க்கிறேன் என்று குமாரசாமி தெரிவித்து உள்ளார். #Kumaraswamy #PMModi
பெங்களூரு,

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார். நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும், அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார் ரத்தோர்.
 
இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார். இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி பஞ்சபூத தத்துவத்தை விளக்கும் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் பிரதமர் மோடி பிட்னஸ் சவால் விடுத்து இருந்தார். 

இந்த நிலையில், மோடியின் பிட்னஸ் சவால் குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி,  எனது உடல் பிட்னசைவிட கர்நடக மாநில வளர்ச்சி பிட்னஸ்தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் குமாரசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

 “ எனது உடல்நலம் பற்றி அக்கறை கொண்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலம் அனைவருக்கும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனது தினசரி உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இருந்தாலும், எனது மாநிலத்தின் வளர்ச்சி பற்றியே நான் அதிகம் அக்கறை கொள்பவன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு  உங்கள் ஆதரவு தேவை ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை -பிரதமர் மோடி
கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை என கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
2. ஒடிசாவில் பிரதமர் மோடி தலைமையில் ரூ.1,550 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
ஒடிசாவில் ரூ.1,550 கோடியிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
3. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?
கர்நாடகத்தில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
4. பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.
5. பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வருகிறார் - பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வர உள்ளார். அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.