பிற விளையாட்டு

‘முக்காடு அணிய முடியாது’ ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல் + "||" + Soumya Swaminathan, Indian chess star, boycotts Iran event over hijab law

‘முக்காடு அணிய முடியாது’ ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல்

‘முக்காடு அணிய முடியாது’ ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல்
தலையில் முக்காடு அணிந்து விளையாட முடியாது என ஈரானில் நடைபெற உள்ள ஆசிய செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் விலகியுள்ளார். #SoumyaSwaminathan

புதுடெல்லி,

முன்னாள் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் சவுமியா சுவாமிநாதன், ஈரானில் நடைபெற உள்ள ஆசிய செஸ் போட்டியில் கலந்துக்கொள்ள ஆடை கட்டுப்பாடு விதிப்பது என்னுடைய தனிப்பட்ட உரிமையை மீறுவதாக உள்ளது என கூறி, போட்டியில் இருந்து விலகி உள்ளார். 

ஆசிய நாடுகள் கலந்துக்கொள்ளும் செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை நடக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானில் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள விதிக்கப்படும் ஆடை கட்டுப்பாட்டிற்கு உடன்பட இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி உள்ளார். 

இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், “கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் அல்லது புர்கா அணிய வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் என ஈரானிய சட்டம் உத்தரவிடுவது கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், மனசாட்சி மற்றும் மதம் உள்பட என்னுடைய அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் என்னுடைய உரிமையை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நான் ஈரானுக்கு செல்லாமல் இருப்பது ஒன்றுதான்,” என்று கூறியுள்ளார்.  

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க செஸ் சாம்பியன் நாஸி பைய்கிடே பர்னஸ் தெக்ரானில் நடைபெற இருந்த போட்டியில் தலையில் முக்காடு அணிய மறுத்து போட்டியிலிருந்து  விலகினார். 

வெளிநாடுகளில் தலையில் முக்காடு அணியாமல் விளையாடிய டோர்சா தேராக்‌ஷானிக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஈரானிய செஸ் வாரியம் தடை விதித்தது. இப்போது அவர் அமெரிக்காவிற்காக விளையாடி வருகிறார். 1979-ம் ஆண்டு ஏற்பட்ட ஈரான் புரட்சியிலிருந்து பெண்கள் பொது இடங்களில் தலையில் முக்காடு அணிந்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.