மாநில செய்திகள்

தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது + "||" + JactoGeo Organizations Arrested

தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது

தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக சென்ற  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
முதல்-அமைச்சரை சந்திக்க தலைமைச்செயலகம் நோக்கி சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
சென்னை,

பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் கடந்த 11-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர்.

உண்ணாவிரத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்தநிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்-அமைச்சரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பேரணியாக செல்பவர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றி அப்புறப்படுத்தி வருகின்றனர். 

முதல்-அமைச்சரை  சந்திக்க தலைமைச்செயலகம் நோக்கி சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.