தேசிய செய்திகள்

காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு + "||" + Congress President Rahul Gandhi hosts an Iftar party in Delhi

காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு
காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். #RahulGandhi
புதுடெல்லி, 

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், பிரணாப்  முகர்ஜி கலந்து கொண்டு பேசியது  தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ் சார்பிலும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. 

 இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைக்கப்படவில்லை என்ற செய்தி வெளியானது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.  இதனையடுத்து  இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என தெரிவித்தது.

இந்த நிலையில், புதுடெல்லி   தாஜ் பேலஸ் ஓட்டலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  இஃப்தார் விருந்து அளித்தார்.    கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு  காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்தை ஏற்பாடு செய்து உள்ளது. 

இந்த விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதீபா பாட்டீல், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.