மாநில செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை + "||" + There is no change in the price of petrol and diesel on the 3rd day following the hike

தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.  

இதைத்தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இருவாரங்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. 14 நாட்களாக தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று (ஜூன் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.