உலக செய்திகள்

டிரம்புடனான சந்திப்பிற்கு பின் நாடு திரும்பினார் கிம்; வடகொரிய ஊடகம் தகவல் + "||" + Kim Jong Un returns to N.Korea from summit with Trump; state media

டிரம்புடனான சந்திப்பிற்கு பின் நாடு திரும்பினார் கிம்; வடகொரிய ஊடகம் தகவல்

டிரம்புடனான சந்திப்பிற்கு பின் நாடு திரும்பினார் கிம்; வடகொரிய ஊடகம் தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்புடனான வரலாற்று சந்திப்புக்கு பின்னர் கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு திரும்பினார் என இன்று அந்நாட்டின் அலுவல்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

சியோல்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே சிங்கப்பூரின் ஷாங்ரி லா ஓட்டலில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.  அதன்பின் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அணு ஆயுதங்களை கைவிடுவோம் என டிரம்பிடம் கிம் உறுதியளித்து உள்ளார்.  இதற்கு பதிலாக வடகொரியாவுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டார்.  ஆனால் கிம் ஜாங் அன் உடனடியாக அங்கிருந்து நாடு திரும்புவது பற்றி பல யூகங்கள் வெளியாகின.

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான சந்திப்பு பற்றி சீன அதிபர் ஜி ஜின்பிங் கிம்மிடம் கேட்டு தெரிந்து கொள்வார் என கூறப்பட்டது.  வடகொரிய குழு புறப்பட்டு சென்ற விமானங்களை சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கவனித்து வந்தன.

இந்நிலையில், வடகொரியாவின் அலுவல்பூர்வ தகவல்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கிம் ஜாங் அன் புதன்கிழமை காலை வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு வந்தடைந்து உள்ளார் என தெரிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
2. எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலையா? டொனால்டு டிரம்ப் பதில்
எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலை அறிவிப்பை நெருங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு திடீர் பயணம்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றார்.
4. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி
அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
5. அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா? பரபரப்பு தகவல்கள்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.