மாநில செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு; அணுகுண்டா? அல்லது புஷ்வாணமா? பா.ஜனதா தலைவர் தமிழிசை பேட்டி + "||" + Tamilisai Soundararajan views on 18 MLA disqualification Verdict

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு; அணுகுண்டா? அல்லது புஷ்வாணமா? பா.ஜனதா தலைவர் தமிழிசை பேட்டி

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு; அணுகுண்டா? அல்லது புஷ்வாணமா? பா.ஜனதா தலைவர் தமிழிசை பேட்டி
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தமிழக அரசியலில் அணுகுண்டா? அல்லது புஷ்வாணமா என்பது தீர்ப்பையடுத்து தெரியும் என தமிழிசை கூறிஉள்ளார். #MLAsDisqualification #BJP
கோவை,
 
தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பது இன்று தெரியவரும். தீர்ப்பு மீது மிகுந்த எதிர்பார்பு உள்ள நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் தமிழிசையிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. தமிழிசை பேசுகையில், தமிழகமே இன்றைய ஒரு மணி தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

18 எம்.எல்.ஏ.க்களின் நிலை என்னவாகும் என்பதை ஐகோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். வழக்கின் முடிவு எப்படி வருகின்றது என்பதை பார்ப்போம். தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம் அல்லது புஷ்வாணமாக போகவும் செய்யலாம். தமிழக அரசியலில் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கப் போகிறதா? அல்லது புஷ்வாணமாக போக போகிறதா? என்பதை தீர்ப்பு வெளியான பின்பு தான் பார்க்க முடியும். 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ஒரு முடிவெடுத்திருக்கிறார். நீதிபதிகள் என்ன முடிவெடுக்கின்றனர் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.