மாநில செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம் + "||" + AIADMK MLAs Disqualification Madras HC Gives Split Verdict

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர், இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #MLAsDisqualification

சென்னை,
 
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் புகார் கொடுத்ததால், அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்ற முந்தைய இடைக்கால தடை உத்தரவும் நீடிக்கும் என்றும் சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்: மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்த பின் முடிவு - டி.டி.வி.தினகரன்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்த பின்னரே முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை