மாநில செய்திகள்

தகுதி நீக்கம் செல்லும் ஏன்? தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி + "||" + AIADMK MLAs Disqualification Case Madras HC delivers split verdict

தகுதி நீக்கம் செல்லும் ஏன்? தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

தகுதி நீக்கம் செல்லும் ஏன்? தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். #MLAsDisqualification
சென்னை,

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்ற முந்தைய இடைக்கால தடை உத்தரவும் நீடிக்கும் என்றும் சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும், அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது என ஐகோர்ட்டு கூறியுள்ளது. 

சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். 

சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது, சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.