தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு + "||" + Soldier Abducted From Kashmir's Pulwama While On Leave, Says Army

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர்: ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் அவுரசங்சேப் என்ற பகுதியில் ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரின் இல்லம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. 

விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்,  புல்வமா சென்றிருந்த சமயத்தில், பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி சமீர் டைகருக்கு எதிராக நடைபெற்ற  என்கவுண்டர் சம்பவத்தில்  கடத்திச்செல்லப்பட்ட ராணுவ வீரரும் இடம் பெற்று இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அமைதி நடவடிக்கையின் துவக்கமாக கடந்த ஒரு மாத காலமாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திவைக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இந்த வேளையில், பயங்கரவாதிகளின் குற்றச்செயல்பாடுகள் அதிகம் அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச்சென்ற உமர் பயாஸ் என்ற இளம் ராணுவ அதிகாரி பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டதும் மறுநாள், துப்பாக்கிக்குண்டுகள் காயத்துடன் ராணுவ அதிகாரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் நினைவிருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளூர் போராளிகள் மண்ணின் மைந்தர்கள் -மெகபூபா முப்தி
உள்ளூர் போராளிகள் இந்த மண்ணின் மைந்தர்கள் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறி உள்ளார்.
2. காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3. மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி?
மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. இந்திய எல்லையில் கடந்த 2 நாட்களில் அத்துமீறி 4 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
எல்லைக்கு அப்பால் இருந்து கடந்த 2 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம், நான்கு முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
5. 2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மத்திய அரசு
2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.