மாநில செய்திகள்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: ஸ்டாலின் சொல்வது என்ன? + "||" + Judges Split On 18 Disqualified Lawmakers: stalin says need to speedy judgement

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: ஸ்டாலின் சொல்வது என்ன?

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: ஸ்டாலின் சொல்வது என்ன?
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், டுவிட்டரில் மு.க ஸ்டாலின் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். 

இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்ற முந்தைய இடைக்கால தடை உத்தரவும் நீடிக்கும் என்றும் சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்  திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும்.

 தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்”  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.89 கோடிக்கு பணப்பட்டுவாடா-எந்த ஆவணத்தையும் நாங்கள் வெளியிடவில்லை-வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
2. நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிப்போம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3. விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் -சென்னை ஐகோர்ட்
விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
4. கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
5. மைக்கேல் ராயப்பனுக்காக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டாரா விஷால்? சிம்பு வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்!
ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.