தேசிய செய்திகள்

அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் + "||" + Rajnath Singh reviews security arrangements for Amarnath yatra

அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அமர்நாத் யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்குவதையொட்டி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. #RajnathSingh #Amarnathyatra
ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் அமர்நாத் யாத்திரைக்கு பயணம் செய்வார்கள்.  இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்கி 60 நாட்கள் நடக்கிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பக்தர்களின் வாகனங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிப்பது, செல்போன் ஜாமர்கள், சிசிடிவி கேமராக்கள், குண்டு வீச்சு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க நிலவறைகள், வெடிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதலாக 22,500 பாதுகாப்பு படையினரை மத்திய அரசிடம் காஷ்மீர் மாநில அரசு கேட்டுள்ளது. மாநில போலீசாரும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட துணை ராணுவ படைகள், ராணுவ வீரர்கள் என பாதுகாப்பு படையினர் அமர்நாத் யாத்திரை பாதையில் குவிக்கப்பட உள்ளனர். 

முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார்.  அமர்நாத்தில் கடந்தாண்டு யாத்திரையின் போது 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்.