தேசிய செய்திகள்

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது + "||" + India rejects UN report on rights violations in Kashmir calls it fallacious, motivated

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது
காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது. #Kashmir #India #UN
புதுடெல்லி,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. "வெளிப்படையான பாரபட்சம்" மற்றும் "தவறான கதை" உருவாக்கும் முயற்சி என்று இந்திய வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.  

“ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல்,  முரண்பாடானது மற்றும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற அறிக்கைக்கான நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

“ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப்பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பை கொண்டு திட்டமிடப்பட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
2. காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா
காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் ராஜினாமா செய்துள்ளார்.
3. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு மக்களவை ஒப்புதல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இணைந்து ஆட்சியமைத்து இருந்தது. இந்த கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகியதால் கடந்த ஜூன் மாதம் முதல்–மந்திரி மெகபூபா முப்தி பதவி விலகினார்.
4. ஜம்மு காஷ்மீர்: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி, 34 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் பலியானார்.
5. ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் -இரண்டு ராணுவ அதிகாரிகள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.