தேசிய செய்திகள்

18 ஆம் தேதி தேர்வுக்குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து முடிவு : மத்திய அரசு + "||" + center files replies on the AIMS hospital case which is to be located in TN

18 ஆம் தேதி தேர்வுக்குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து முடிவு : மத்திய அரசு

18 ஆம் தேதி தேர்வுக்குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து முடிவு : மத்திய அரசு
18 ஆம் தேதி தேர்வுக்குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, ஜூன் மாதத்திற்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? அமையும் என்பது பற்றி பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய சுகாதாரத்துறை இயக்குநர், வரும் 18 ஆம் தேதி தேர்வுக்குழுவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.