தேசிய செய்திகள்

டெல்லியில் கடுமையான காற்று மாசு: மக்கள் அவதி + "||" + Delhi Under A Thick Haze Of Dust, Pollution At "Severe" Level

டெல்லியில் கடுமையான காற்று மாசு: மக்கள் அவதி

டெல்லியில் கடுமையான  காற்று மாசு: மக்கள் அவதி
டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
புதுடெல்லி,

புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயகர நிலைக்கு சென்றுள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசிவருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 8 மடங்கு மாசு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இதனால் இன்னும் சில நாட்களுக்கு மாசு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் மக்களுக்கு கண் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் குளிர்காலத்தில் கூட இல்லாதபடி, படுமோசமான  அளவில் காற்றின் தரம் காணப்படுகிறது. புழுதிப்புயலால் சாலைகளில் பார்வைக் குறைவு ஏற்பட்டு வாகனங்கள் கடும் சிரமத்துடன் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது !
டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாய நிலையை எட்டியுள்ளது.
2. டெல்லியில் விமானத்தை இயக்க போதையில் வந்த விமானி - பரிசோதனையில் சிக்கினார்
டெல்லியில் விமானத்தை இயக்க வந்த விமானி, பரிசோதனையின் போது போதையில் இருந்ததாக சிக்கினார்.
3. டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல்
பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.
4. டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்
டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
5. டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை
டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.