கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 347 ரன்கள் சேர்ப்பு + "||" + AFG claw back with quick wickets

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 347 ரன்கள் சேர்ப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 347 ரன்கள் சேர்ப்பு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 347 ரன்கள் சேர்த்துள்ளது. #INDvsAFG
பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது. ஹர்தி பாண்ட்யா 10 ரன்களுடனும் அஷ்வின் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

முன்னதாக, ஆட்டத்தின் போது இருமுறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்திய அணியில் துவக்க வீரர்கள் இருவரும் (முரளி விஜய் 105, ஷிகர் தவான் 107) சதம் அடித்து அசத்தினர்.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. 26 ஓவர்கள் வீசிய அவர், 120 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
2. ஆப்கானிஸ்தான்: தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 15 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலியாயினர்.
3. ஆப்கானிஸ்தான்: வான்தாக்குதலில் 4 அப்பாவி பொதுமக்கள், 10 தலீபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 10 தலீபான்கள் பலியானதுடன், அப்பாவி பொது மக்கள் 4 பேரும் பலியாயினர்.
4. இந்தியாவின் நட்பு கிடைத்தது ஆப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் -பிரெஸ்னா முசஸாய்
இந்தியாவின் நட்பு கிடைத்தது ஆப்கானிஸ்தானின் அதிர்ஷ்டம் என அந்நாட்டின் மலாலாவாகக் கருதப்படும் பிரெஸ்னா முசஸாய் தெரிவித்துள்ளார்.
5. ஆப்கானில் தேர்தல் பிரசாரத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் 7 பேர் உயிரிழப்பு
ஆப்கானில் தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.