தேசிய செய்திகள்

இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு கோவா திரும்பினார் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் + "||" + Chief Minister Manohar Parrikar arrives in Panaji (Goa). He was undergoing treatment for last 2 and half months in the US.

இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு கோவா திரும்பினார் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர்

இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு கோவா திரும்பினார் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர்
இரண்டரை மாத கால சிகிச்சைக்கு பிறகு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கோவா திரும்பினார். #ManoharParrikar
பானஜி,

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் சிகிச்சைகள் பெற்றார். இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கார் இன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர், மும்பை வந்தார். அங்கிருந்து மாலை கோவா திரும்பினார். பானஜி விமான நிலையத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த மனோகர் பாரிக்கரை, அதிகாரிகள் வரவேற்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மனோகர் பாரிக்கர் விரைவில் குணமாக வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மவுலானாக்கள்
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் விரைவில் குணமாக வேண்டி முஸ்லிம் மவுலானாக்கள் கோவா பாஜக அலுவலகத்தில் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
2. கோவாவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதிய எண்ணிக்கை எங்களிடம் உள்ளது: காங்கிரஸ் சொல்கிறது
கோவாவில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேவையான எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
3. கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது, காங்கிரஸ் - கவர்னரிடம் மனு
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
4. கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. மருத்துவ பரிசோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் மனோகர் பாரிக்கர்
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனைகளுக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.