மாநில செய்திகள்

”18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை” தீர்ப்பில் நீதிபதி சுந்தர் கருத்து + "||" + 18 MLAs have not been given enough opportunity MadrasHC

”18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை” தீர்ப்பில் நீதிபதி சுந்தர் கருத்து

”18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை”  தீர்ப்பில் நீதிபதி சுந்தர் கருத்து
ஜக்கையன் தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்க 18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தீர்ப்பில் நீதிபதி சுந்தர் கருத்து தெரிவித்துள்ளார். #MLAsDisqualificationCase
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் புகார் கொடுத்ததால், அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். 

இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.  இந்த தீர்ப்பில்  நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். 

இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார்.

இந்தநிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பில் நீதிபதி சுந்தர் கருத்து

* ஆளுநரிடம் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜக்கையன் எம்எல்ஏதான் முதலில் கடிதம் அளித்தார், ஆனால் அவரை தகுதிநீக்கம் செய்யாதது முரண்பாடாக உள்ளது.

* ஜக்கையன் தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்க 18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

* சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும்போது, அதிமுக யாருக்கு என்பதே முடிவு ஆகவில்லை.

* சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்க சபாநாயகர் எடுக்கும் முடிவு, வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறாரா என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

* வழக்கு விசாரணையின்போது, 40 வழக்குகளின் அடிப்படையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.