மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: இ–சேவை மையங்கள் சனிக்கிழமை செயல்படாது தமிழக அரசு அறிவிப்பு + "||" + E seva service not operated in saturday

பராமரிப்பு பணி: இ–சேவை மையங்கள் சனிக்கிழமை செயல்படாது தமிழக அரசு அறிவிப்பு

பராமரிப்பு பணி: இ–சேவை மையங்கள் சனிக்கிழமை செயல்படாது தமிழக அரசு அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக இ–சேவை மையங்கள் சனிக்கிழமை செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் அரசு இ–சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ–சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. 

இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ–சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ–சேவை மையங்கள் 18–ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.