தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை + "||" + Editor of Rising Kashmir newspaper Shujaat Bukhari shot dead by terrorists in Press Colony in Srinagar city.

ஜம்மு காஷ்மீர்: பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் பிரபல பத்திரிகையின் ஆசிரியர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் ”ரைசிங் காஷ்மீர்” என்ற நாளிதழ் செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் மிகவும் பிரபலமான இந்த பத்திரிகையின் ஆசிரியரான ஷுஜாத் புகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிரஸ் காலனி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது புகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். காஷ்மீரில் நீண்ட காலத்திற்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.  

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் காவல்துறை புகாரிக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த சூழலில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரம்ஜானுக்கு முதல் நாளில் பயங்கரவாதம் தனது கொடூரத்தை காட்டியுள்ளது புகாரியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். புகாரியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: 30-க்கும் மேற்பட்ட கடைகள் மண்ணில் புதைந்தன
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
2. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தகவல் வெளியாகியுள்ளது.
3. சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து குண்டை வீச செய்த பயங்கரவாத இயக்கம்
சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து ஜம்மு பஸ் நிலையத்தில் வெடிகுண்டை பயங்கரவாத இயக்கம் வீச செய்துள்ளது.
4. ஜம்முவில் கையெறி குண்டு வீச்சு: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசப்பட்டதில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
5. ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.