கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: சவுதிஅரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷியா அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி + "||" + Soccer World Cup: Russia's 5-0 win over Saudi Arabia

உலகக்கோப்பை கால்பந்து: சவுதிஅரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷியா அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: சவுதிஅரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷியா அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் ரஷியா-சவுதிஅரேபியா அணிகள் இடையே நடைபெற்றது. #FIFAWorldCup #RUSKSA
மாஸ்கோ,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று  தொடங்கியது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.


இந்நிலையில் முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் இன்று லுஸ்னிகி மைதானத்தில் மோதின. இந்த போட்டியின் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ரஷிய அணி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஷ்ய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.