தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் பயணம் + "||" + PM Narendra Modi in Jaipur today

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் பயணம்
ராஜஸ்தானில் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களால் பலனடைந்தவர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெய்ப்பூரில் இன்று உரை நிகழ்த்துகிறார். #PmModi
ஜெய்பூர்,

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நலத் திட்டங்கள் மூலம் சுமார் 2.5 லட்சம் பேர் வரை பயனடைந்திருப்பதாக பொது நிர்வாகத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளை ஜெய்ப்பூர் நகரில் உள்ள அமருதன் கா பாக் மைதானத்துக்கு அழைத்து வர 5,579 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 33 மாவட்டங்களிலிருந்து அரசின் நலத் திட்டங்களால் பயனடைந்தவர்களை அழைத்து வர ரூ.7.2 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. தலா 1 கிலோ மீட்டருக்கு மாநில அரசின் சார்பில் ரூ.20 வழங்கப்படும். எஞ்சிய தொகை நலத் திட்ட நிதிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது நிர்வாகத் துறை இணைச் செயலர் ராஜீவ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி ஜெய்ப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறை கூடுதல் டிஜியான என்.ஆர்.கே.ரெட்டி கூறுகையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி 2 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்;என்றார்தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியை சந்திக்க முடியாத வருத்தத்தில் பேருந்து மீது தீ வைத்த பெண் கைது
உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முடியாத வருத்தத்தில் பெண் ஒருவர் பயணிகள் பேருந்து மீது தீ வைத்துள்ளார்.
2. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என சிஏஜியிடம் காங்கிரஸ் மனு
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என சிஏஜியிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
3. பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி சந்திப்பு
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
4. பிரதமர் மோடி கோடீஸ்வரர்; சொந்தமாக கார் கிடையாது - சொத்து விபரங்கள் வெளியீடு
பிரதமர் மோடிக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது என்றும் சொந்தமாக கார் கிடையாது என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
5. 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண் ஸ்கை டைவர்
இந்திய ஸ்கை டைவர் ஷீடால் மகாஜன் என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு சுமார் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.