தேசிய செய்திகள்

கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறவில்லை: பாஜக எம்.பி கருத்தால் சர்ச்சை + "||" + BJP MP claims Christians kept off from Indian freedom struggle

கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறவில்லை: பாஜக எம்.பி கருத்தால் சர்ச்சை

கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறவில்லை: பாஜக எம்.பி கருத்தால் சர்ச்சை
கிறிஸ்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறவில்லை என்று பாஜக எம்.பி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. #BJP
மும்பை,

மராட்டிய மாநிலம் மலாடில்  முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.

 விழாவில் அவர் பேசியதாவது:-, ”இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது” என்றார். 

பாரதீய ஜனதா கட்சி எம்.பியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில், எம்.பியின் சர்ச்சை அடங்கிய வீடியோ தொகுப்பு வேகமாக பரவி வருகிறது. 

 பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மராட்டிய காங்கிரஸ் தலைவர் சஞ்செய் நிருபம்  கூறும் போது, “ கோபால் ஷெட்டி சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக பேசி வருகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய சேவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எனவே,  கிறிஸ்தவர்களிடம், தனது கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

ஆனால், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள பாஜக எம்.பி, கட்சித்தலைமையிடம் தனது கருத்து பற்றி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.