உலக செய்திகள்

தாய்லாந்து: கனமழை எச்சரிக்கையால், குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம் + "||" + Thai cave rescue stalled due to rain forecast

தாய்லாந்து: கனமழை எச்சரிக்கையால், குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

தாய்லாந்து: கனமழை எச்சரிக்கையால், குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
தாய்லாந்தில் கனமழை எச்சரிக்கையால், குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. #Thailandcave
மே சாய்,

தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவரது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.

அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன. 

இந்தச் சூழலில், மழை வெள்ளம் கொஞ்சம் வடிந்ததால் சிறுவர்கள் சிக்கிய 7 நாள்களுக்குப் பிறகு தேடுதல் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் இதையடுத்து, அந்த 13 பேரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது. எனினும், கடுமையான வெள்ளம் மற்றும் சகதியில் அவர்கள் இத்தனை நாள்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்றும் அஞ்சப்பட்டது. 

இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் ஜூலை 2 ஆம் தேதி இரவு கண்டறிந்தார்.பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சகதியில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகே, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று  மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் அந்தக் குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான அளவில் குறைந்து வருவது உறுதியாகியுள்ளதாலும், அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதாலும், குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ”கனமழை எச்சரிக்கை கரணமாக இன்று மீட்பு பணி நடைபெறாது” என்று  சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்தார். 

முன்னதாக, குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு 15 சதவீதம் அளவுக்கே இருப்பதாகவும், மிகவும் ஆபத்தானது எனவும் இது தாய்லாந்து கடற்படை அதிகாரி அபாகார்ன் யோ-கோன்கீவ் தெரிவித்தார். கனமழை பெய்தால், நிலைமை மேலும் மோசமாகும் என கூறப்படுவதால், சோக சம்பவம் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என  தாய்லாந்து மக்கள்  பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.