கிரிக்கெட்

குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உலக கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு + "||" + FIFA invites trapped Thai boys to World Cup final

குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உலக கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு

குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு   உலக கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து இறுதி போட்டியை காணவருமாறு அழைப்பு விடுத்துள்ளார். #Thailandcave #FIFA

தாய்லாந்தின் தம் லுவாங் குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர், உயிருடன் இருப்பதாக பிரித்தானியவை சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து மீட்கும் பணியில் தாய்லாந்தின் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், குகையில் சிக்கியுள்ள 13 பேரும் விரைவில் உயிருடன் மீட்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும், அதற்காக தொடர்ந்து பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 13 பேரும் மீட்கப்பட்டு குடும்பத்துடன் இணைந்ததும், அவர்களது உடல் ஒத்துழைத்தால் ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து இறுதிப்போட்டியினை காண வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.முன்னதாக குகையில் சிக்கியுள்ள 13 பேருக்கும் ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்களை கொண்டு சென்ற தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் சமன் குணன் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர்: சிறுவர்களை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தாத்தாவை பார்க்க வந்த சிறுவர்களை கடத்த முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
2. தாய்லாந்து: குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஊடகங்களை சந்தித்து பேச ஏற்பாடு
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகின்றனர். #Thailandcave
3. தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு, மழை பெய்ய வாய்ப்பு வானிலை எச்சரிக்கை
தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், இதுவரையில் 8 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர். #ThailandCaveRescue
4. 'நான் நல்லா இருக்கேன் ஆனா ரொம்ப குளிருது' - தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்களின் கடிதம்
'நாங்கள் நலமாக உள்ளோம் ஆனா ரொம்ப குளிருது என தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
5. தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் பெற்றோர்களுடன் பேசுவதற்காக இணையதள வசதி
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் பெற்றோர்களுடன் பேசுவதற்காக இணையதள வசதி ஏற்படுத்தி தரும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது. #Thailandcave