தேசிய செய்திகள்

இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு + "||" + I met with Bhutan's Prime Minister says rahul Gandhi

இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு

இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு
3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமர் இன்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #RahulGandhi
புதுடெல்லி, 

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, பிரதமர் மோடியை சந்தித்து டோப்கே ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பூடான் பிரதமர் டோப்கே சந்தித்து பேசியுள்ளார். 

இந்த சந்திப்பு குறித்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “ பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கேவை சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 5 ஆம் தேதி இந்தியா வருகை தந்தார். இந்தியா வருகை தந்த டோப்கேவை, வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங் வரேவேற்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்ய திட்டம்
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் மக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.
2. இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு ஐ.நா. குழு அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழக்கின்றன என ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 68-வது பிறந்த நாள்: பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி வாழ்த்து
68-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
4. கேள்வி கேட்க அச்ச உணர்வு கூடாது; மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
கேள்வி கேட்க அச்ச உணர்வு கூடாது. கற்பதற்கு அதுவே முக்கிய விசயம் என பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
5. மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
மத்தியப் பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.