கிரிக்கெட்

தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து + "||" + MS Dhoni celebrates birthday with teammates, wife Sakshi, daughter Ziva; watch video

தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து

தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayDhoni #MSDhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி, தனது திறமையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றி கேப்டன் தோனி. 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக ஆடிவருகிறார்.

இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் தோனி. தன் மீதான விமர்சனங்கள் எழும்போதெல்லாம், தனது திறமையின் மூலம் பதிலடி கொடுத்து 14 ஆண்டுகளாக தனக்கான இடத்தை தக்கவைத்து தன்னை அணியின் முக்கியமான வீரராக நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்.

இன்று தோனியின் 37 வது பிறந்த நாள்.  தனது மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை தோனி கொண்டாடியுள்ளார்.தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கிலாந்தில் தான். இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டி தோனிக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இது தோனிக்கு 500-வது சர்வதேசப் போட்டியாகும்.

அவரது பிறந்த நாளுக்கு  கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களும்  வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.





தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை
ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.
2. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மகன், மருமகன் சேர்ப்பு தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் மீது கூறப்பட்ட புகாரை அவர் நிராகரித்துள்ளார்.
3. நெற்றியில் குங்குமம் - சுடிதார் துப்பட்டா அணிந்து பெண் வேடத்தில் கிரிக்கெட் வீரர் கம்பீர்
சுடிதார் துப்பட்டா அணிந்து குங்குமம் வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர் கம்பீரின் புகைப்படம் வைரலாகி உள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
5. இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார்?
இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.